×

விடுமுறை தினமான நேற்று ஏலகிரி மலையில் படகில் குடும்பத்துடன் பயணித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஏலகிரி : சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை பெங்களூர் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார் பேட்டை ரயில்வே நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது.இம்மலை 1410 மீட்டர் உயரத்தில் 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு உயர்ந்த மலைப்பகுதியில் நான்கு மலைகளால் சூழப்பட்டு  இயற்கை நிறைந்த சூழலில் 14 கிராமங்களை உள்ளடக்கி பசுமை நிறக் கோலத்தில் காட்சியளிக்கிறது.

 ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தளம் என்பதால் வெளிநாடு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும், இந்த சுற்றுலா தளத்தினை காண ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர். இங்கு முக்கிய சுற்றுலாத்தளங்கலான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்கலம் சுவாமிமலை ஏற்றம், பண்டேரா பார்க், செல்பி பார்க், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன.

 படகு இல்லத்தில் குடும்பத்தோடும், நண்பர்களோடும் படகு சவாரி செய்தும், இயற்கை பூங்காவில் மலர்களை ரசித்தும், புல்த்தரையில் மீது அமர்ந்தும், செயற்கை  நீரூற்றில்  செல்பி எடுத்து மகிழ்ந்து பொழுதுபோக்கினர். மேலும் பண்டேரா பார்க்கில் பறவைகளோடும், செல்லப்பிராணிகளோடும், சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து விளையாடினர். செல்பி பார்க்கில் குழந்தைகளோடு செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் காண மூலிகை பண்ணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, மங்களம் சுவாமி மலை ஏற்றம், நிலாவூர் ஸ்ரீ கதாநாச்சி அம்மன் கோவில், உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் குறைந்த செலவில் ஏலகிரி மலையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

Tags : Elagiri , Yelagiri: Tourists enjoyed boating with their families at the tourist spot of Yelagiri hill. Jollarpet, Tirupattur district.
× RELATED சுற்றுலாதலமான ஏலகிரி மலைப்பாதையில்...