திருப்பதி மாவட்டத்தில் காவலர் பணிக்கான தேர்வை 28,848 பேர் எழுதினர்-2,404 பேர் ஆப்சென்ட்

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் காவலர் பணிகளுக்கான முதற்கட்ட எழுத்து தேர்வை 28,848 பேர் எழுதினர். மேலும், 2,404 பேர் பங்கேற்கவில்லை.  

ஆந்திர மாநில காவல் துறையில் கான்ஸ்டபிள் காவலர் பணிகளுக்கான   முதற்கட்ட எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. திருப்பதி மாவட்டத்தில் எஸ்வி கலைக்கல்லூரி, பிரகாசம் பவன், சடலவாடா ரமணம்மா பொறியியல் கல்லூரி, மங்கலம் எஸ்வி பொறியியல் கல்லூரி, அன்னமாச்சார்யா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு மையங்களை எஸ்பி பரமேஸ்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது: திருப்பதி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வர்களுக்கு  இலவச பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் 57 எழுத்து தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதில், 31,252 தேர்வர்களில் 28,848 பேர் தேர்வு எழுதினர். 2,404 பேர் பங்கேற்கவில்லை. இதனால், 92.7 சதவீதம் பேர் தேர்வெழுதினர்.

தேர்வு மையங்களில் எங்கும் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல்  தேர்வர்களுக்கு வேலை வாங்கி தருவதாக சொல்லும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். உடல் எழுத்து தேர்வு வெளிப்படை தன்மையுடன் நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார்.சித்தூர்: சித்தூர் நகரில் உள்ள பி.வி.கே.என். அரசு கல்லூரி மற்றும் விஜயா கல்லூரிகளில் நடைபெற்ற காவலர் பணிக்கான தேர்வை எஸ்பி ரிஷாந்த் ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘சித்தூர் நகரில் 33 மையங்களிலும் காவலர் பணிக்கான முதற்கட்ட தேர்வுகள் நடைபெற்றது.

தேர்வு எழுதும் மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 452 காவலர்கள் மற்றும் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

2 மையங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பறக்கும் படைகளும், 4 மையங்களுக்கு டிஎஸ்பி அளவில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டது. தேர்வு மையங்களை சுற்றியுள்ள ஜெராக்ஸ் கடைகள் மூடப்பட்டது. தேர்வுகள் அமைதியான முறையில் நடைபெற்றது’ என்றார்.

Related Stories: