சங்கராபுரம் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் உதயசூரியா (25). பட்டதாரியான இவர் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த மகாலிங்கம் மகள் காயத்ரி (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் காயத்ரி கடந்த 21ம் தேதி டைப்ரைட்டிங் கிளாஸ் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து காயத்ரியின் தந்தை மகாலிங்கம் ராஜபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகளான உதயசூரியா-காயத்ரி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் இதுதொடர்பாக காயத்ரியின்   பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வரவழைக்கப்பட்டனர். பேச்சுவார்த்தையில், நான் எனது கணவர் உதயசூரியாவுடன் செல்வதாக காயத்ரி கூறியதால் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: