×

₹1.67 கோடி மதிப்பீட்டில் சாயர்புரத்தில் புதிய பஸ் நிலையம்-கனிமொழி எம்.பி. அடிக்கல்நாட்டினார்

ஏரல் : சாயர்புரத்தில் ₹1.67 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி பங்கேற்றனர்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விநிலையங்கள் நிறைந்த சாயர்புரத்தில் பஸ் நிலையம் இன்றி மக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து 2009ம் ஆண்டில் வைகுண்டம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஊர்வசி செல்வராஜ், சாயர்புரம் பேரூராட்சி தலைவராக இருந்த பொன்சேகர் ஆகியோர் டயோசீஸ் நிர்வாகிகளிடம் பேசி பஸ் நிலையம் அமைப்பதற்கு 51 சென்ட் நிலத்தை  இலவசமாக பெற்றனர்.

ஆனால், அதன் பிறகும் பஸ் நிலைய கட்டுமானப் பணி நடைபெறாத நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலினை கனிமொழி எம்.பி. சந்தித்து பஸ் நிலையம் கட்டித்தர கோரிக்கை விடுத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தற்போதைய எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பேசினார். இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் உத்தரவின்பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹1.67 கோடி மதிப்பீட்டில் சாயர்புரம் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது.

 தலைமை வகித்த கனிமொழி எம்.பி. அடிக்கல்நாட்டி, கட்டுமானப்பணிகளை துவக்கிவைத்துப் பேசினார். விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி முன்னிலை வகித்தனர். இதில் முக்காணி கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட சிறுபாண்மை பிரிவு துணைத் தலைவர் ராஜேஸ் ரவிச்சந்தர், சாயர்புரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அறவாழி, பண்டகசாலை தலைவர் பண்டாரம், தலைமைச் செய்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, செந்தில் ஆறுமுகம், ஆவீன் சேர்மன் சுரேஷ் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம்,

வைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் மத்தி பிஜி ரவி, மேற்கு கொம்பையா, பேரூர் செயலாளர்கள் சாயர்புரம் கண்ணன், ஏரல் ராயப்பன், பெருங்குளம் நவீதமுத்துக்குமார், வைகுண்டம் சுப்புராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகராஜா, பொருளாளர் பத்திரகாளிமுத்து, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், விவசாய அணி துணை அமைப்பாளர் மதிவாணன், சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்சேகர், பஞ்சாயத்து தலைவர்கள் சூழவாய்க்கால் வேங்கையன், திருப்பணிசெட்டிக்குளம் சுயம்புலிங்கம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, சாயர்புரம் நகரத்தலைவர் ஜேக்கப்,

மாவட்ட பொதுச் செயலாளர் சிவகளை பிச்சையா, வடக்கு வட்டாரத் தலைவர் சொரிமுத்து பிரதாபன், திருமண்டல பெருன்ற உறுப்பினர் ஜெபர்சன் சாமுவேல்ராஜ், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல ‘லே’ செயலர் நிகர் பிரின்ஸ் கிப்ட்சன், சபைமன்ற தலைவர் அகஸ்டின் கோயில்ராஜ், திருமண்டல பள்ளிகள் மேலாளர் பிரேம்ராஜாசிங், சுப்பிரமணியபுரம் சேகர குரு டேவிட்ராஜ், செயற்குழு உறுப்பினர் ஜெயரட்சகர், திருச்செந்தூர் ஆர்டி.ஓ. புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, பேரூராட்சி துணைத் தலைவர் பிரியாமேரி ஜெயசீலன், கவுன்சிலர்கள் ஜெபதங்கம் பிரேமா, ப்ளாட்டினாமேரி, இந்திரா, சுமதி, முத்துமாரி, ராமமூர்த்தி, முத்துராஜ், முருகேஸ்வரி, பிரவீணா சொரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி நன்றி கூறினார்.இதைத்தொடர்ந்து  புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தின் ஓரத்தில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மரக்கன்று நட்டினார்.

Tags : Sayarpuram ,Kanimozhi MP , Arel : MP Kanimozhi laid the foundation stone for the construction of a new bus stand at a cost of ₹1.67 crore in Sayarpuram. Minister Anitha at the function
× RELATED சிவத்தையாபுரத்தில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்