சென்னையில் வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து ஆதரவு கேட்டு இருக்கிறார். அதன் பிறகு திருமாவளவன் சந்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: வி.சி.க. சார்பில் இடைத்தேர்தலில் தீவிரமாக பணியாற்றுவோம் என அவர் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்த்து விடுகிறது அதிமுக எனவும் அவரது சந்திப்பின் போது தெளிவுபடுத்தியுள்ளார். இங்கு சனாதன சக்திகளுக்கு இடமில்லை, அவற்றை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்கு கிடைத்த வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல் எனவும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார். 

Related Stories: