மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய செல்லப் பிராணிகள் திருவிழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவில் செல்லப் பிராணிகளுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய திருவிழா Pet Fed. மும்பையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக கொரோனாவால் நடைபெற வில்லை. இந்நிலையில், இந்தாண்டுக்கான நிகழ்ச்சி ஜனவரி 21-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

செல்லப் பிராணிகளுக்கும், அவற்றை வளர்ப்பவர்களுக்கும் வித்யாசமான அனுபவத்தை வழங்கும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் களைகட்டின. இந்நிகழ்ச்சி வளர்ப்பு நாய்களுக்கான மிகப்பெரிய திருவிழாவாக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி, பெங்களூருவிலும் செல்லப்பிராணிகளுக்கான Pet Fed திருவிழா நடைபெற்ற நிலையில் மும்பையிலும் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் உற்சாகத்தோடு நடைபெற்றது. 

Related Stories: