×

பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் நுழைந்த துணை வட்டாச்சியர்: அதிகாரியின் தகவலை அடுத்து கைது..!!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்குள் துணை தாசில்தார் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றி வருகிறார். பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதா சபர்வால் இவரது வீட்டிற்குள் அத்துமீறி ஒருவர் நுழைந்துள்ளதை அறிந்த சுமிதா உடனடியாக பாதுகாவலருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக, வீட்டில் சோதனை நடத்திய பாதுகாவலர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆனந்த் என்பது தெரியவந்தது. அவர் துணை தாசில்தாராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

ஆனந்த் தனது நண்பருடன் பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனந்தின் நண்பர் அந்த வீட்டிற்கு வெளியே காரில் இருந்துள்ளார். அவரையும் பாதுகாவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.பின்னர், பிடிபட்ட 2 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பதவி உயர்வு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சுமிதாவை சந்தித்து பேசவந்ததாக கைது செய்யப்பட்ட துணை தாசில்தார் ஆனந்த் கூறினார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதா புகார் அளித்தார்.


Tags : IAS , A female IAS officer, Deputy District Collector, was arrested following the information of the officer
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...