×

விராலிமலை ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம்: 3 மாதங்களுக்கு பின் களைகட்டிய ஆட்டுச்சந்தை

புதுக்கோட்டை: விராலிமலை ஆட்டுச் சந்தையில் 3 மாதங்களுக்கு பின் விற்பனை களைகாட்டி நிலையில் ரூ.1 கோடி அளவிற்கு வர்த்தகமானது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில்  வாரந்தோறும் திங்கள் கிழமைகளில்  ஆட்டுச் சந்தை நடைபெறும். இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமல்லாமல் புதுச்சேரி, தேனி, பெரியகுளம், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சியில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஆடுகளின் வரத்து குறைந்ததால் விற்பனையும் மந்தமாகவே காணப்பட்டது.

இந்நிலையில், 3 மாதங்களுக்கு பின் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. வரத்து அதிகரித்த போதிலும் விலையும் அதிகரித்தே காணப்பட்டது. வழக்கமாக ரூ.5000 விலைபோகும் ஆடுகள் ரூ.7,000-க்கும், ரூ.10,000 விலைபோகும் ஆடு ரூ.13,000-க்கும், ரூ.15,000 விலைபோகும் ஆடு ரூ.18,000-யும் தாண்டி விற்பனை விற்பனையானது. இதேபோல், மாடுகளின் விலையும் ரூ.2000 முதல் ரூ.3,000 வரை விலை அதிகரித்து விற்பனையானது. பொதுவாக, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தான் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகமாகும் நிலையில், இன்று 3 மணி நேரத்திற்குள்ளாக ரூ.1 கோடி தாண்டி வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags : Viralimalai Dutchandu , Viralimalai, Goat Market, Trade
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை