×

முதலமைச்சர் மீது தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அது எங்களுக்கு வெற்றியை தேடித் தரும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

சென்னை: முதலமைச்சர் மீது தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அது எங்களுக்கு வெற்றியை தேடித் தரும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளேன். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டுள்ளோம்.

முதலமைச்சர் மீது தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அது எங்களுக்கு வெற்றியை தேடித் தரும். தொகுதியை எங்களுக்கு ஒதுக்கி தந்த திமுகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு கட்டாயம் வர வேண்டும் என முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ஏற்கனவே பரப்புரையை தொடங்கிவிட்டனர். யார் வேட்பாளராக வர வேண்டும் என திமுக சொன்னதாக எனக்கு தெரியவில்லை.

வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மேலிடம் திமுகவுடன் கலந்து பேசி இருப்பார்கள் என நினைக்கிறன். காங்கிரஸ் மேலிடம் விரும்பியதால் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர் என கூறினார். எதிரணியில் இருப்பவர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் நிர்மலாமா? வேண்டாமா? என எதிரணி குழப்பத்தில் இருக்கிறது எனவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Elangovan , Chief Minister, People of Tamil Nadu, Vetty, EVKS. Elangovan interview
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...