×

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தினவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

சென்னை: குடியரசு தின வரவேற்பு விழாவுக்கான தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் தமிழ்நாடு பெயரும் திருவள்ளுவர் ஆண்டும் இடம் பெற்றுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தினவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது  சர்ச்சையானது. பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழ்நாடு அரசின் இலட்சினை புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசின் இலட்சினை இடம்பெற்றுள்ளது.

அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை கொள்வதோ மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது

ஆளுநர் மாளிகையின் குடியரசு தினவிழா அழைப்பிதழில் ஆங்கில தேதியுடன் தமிழ் வருடமான திருவள்ளுவர் ஆண்டு தேதியும் இடம்பெற்றுள்ளது. பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது ஆளுநர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் என்று கூறுவதே பொருத்தமானது என்று ஆளுநர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துரையாடலில் தமிழ்நாடு என்றே குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

தமிழ், தமிழ்நாடு, தமிழ் காலச்சாரம் ஆகியவற்றுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம். ஜனவரி 10-ல் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியிலும் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி ஒன்றிய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையின் குடியரசு தினவிழா அழைப்பிதழில் ஆங்கில தேதியுடன் தமிழ் வருடமான திருவள்ளுவர் ஆண்டு தேதியும் இடம்பெற்றுள்ளது


Tags : Republic Day ,Governor House ,Tamil Nadu ,Tamil , Tamil Nadu and Tamil Year are mentioned in the Republic Day invitation issued by the Governor House.
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!