கத்தி முனையில் வழிப்பறியில் 3 ரவுடிகள் சிக்கினர்

பெரம்பூர்: கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் ஏ-பிளாக் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), நேற்று முன்தினம் கொடுங்கையூர் ஜி.என்.டி சாலை, சண்முகா தியேட்டர் அருகே சென்றபோது, அவரை வழிமறித்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், செங்குன்றம் பவானி நகரை சேர்ந்த லோகேஷ் (27), வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த சஞ்சய் (23), அரும்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலாஜி (20) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர். இதில், லோகேஸ்வரன் மீது 11 குற்ற வழக்குகளும், சஞ்சய் மீது 4 குற்ற வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: