இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் மாமல்லபுரத்தில் சுற்றுலா

சென்னை: இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் எலிஸ்கா ஜிகோவா நேற்று மாலை  மாமல்லபுரம் வந்தார். அப்போது, கடற்கரை கோயில் நுழைவு வாயில் முன்பு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் வரவேற்று, புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க அழைத்து சென்றார்.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் போல், எளிமையான முறையில், இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சிற்பங்களை சுற்றிப் பார்த்து, புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும், உற்சாக மிகுதியில் தனது செல்போனிலும் புராதன சின்னங்களை படம் பிடித்தார். அப்போது, சுற்றுலா வழிகாட்டி யுவராஜ் என்பவர் சிற்பங்கள் குறித்து தெளிவாக விளக்கி கூறினார்.

Related Stories: