×

இந்தியா ஓபன் பேட்மின்டன் ஆன் செயாங் சாம்பியன்

புதுடெல்லி,: இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்ரையர் பிரிவில், தென் கொரியாவின் ஆன் செயாங் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் 2 முறை உலக சாம்பியனுமான அகானே யாமகுச்சியுடன் (ஜப்பான்) நேற்று மோதிய ஆன் செயாங் (20 வயது) 15-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடி அதிரடியாக புள்ளிகளைக் குவித்த அவர் 21-16, 21-12  என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி முதல் முறையாக இந்தியா ஓபன் தொடரில் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது.

ஆக்செல்சன் அதிர்ச்சி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் விக்டர் ஆக்செல்சனுடன் (டென்மார்க்) மோதிய தாய்லாந்து வீரர் குன்லாவுட் விதித்சர்ன் 22-20, 10-21, 21-12 என்ற செட் கணக்கில் 1 மணி, 4 நிமிடம் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சூப்பர் 750 அந்தஸ்து பேட்மின்டன் தொடரில் விதிசர்ன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.


Tags : Ann Cheung ,India Open Badminton , Ann Cheung is the India Open Badminton Champion
× RELATED இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி:...