தந்தை, மகள் கதையில் ஹீரோவாக யோகி பாபு

சென்னை: காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் யோகி பாபு, இதற்கு முன்பு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். என்றாலும், காமெடி வேடத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பொம்மை நாயகி இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம், வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரைக்கு வருகிறது. எளிய குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளையும், அதை எதிர்கொள்ளும் அந்த தந்தையின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தையும் சொல்லுகின்ற கதையுடன் உருவாகியுள்ள இதை ஷான் இயக்கியுள்ளார்.

முக்கிய வேடங்களில் சுபத்ரா, ஹரி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி நடித்துள்ளனர். யோகி பாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்துள்ளார். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்து இருக்கிறார். கபிலன், இளையகம்பன், ஜெயமூர்த்தி, அறிவு பாடல்கள் எழுதியுள்ளனர். கடலூர் பகுதியில் முழு படப்பிடிப்பும் நடந்துள்ளது.

Related Stories: