×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் நின்றால் நோட்டாவிடம் தோற்பார்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ்  போட்டியிட்டால், நோட்டாவுக்கும் கீழே தான் வாக்கு பெறுவார் என்று முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: இந்தியா ஒரு சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும் எங்கு  வேண்டுமானாலும் செல்லலாம். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக கொண்டு சீரும் சிறப்புமாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தாம்தான் அதிமுக என ஓபிஎஸ் எவ்வாறு சொல்ல முடியும் அவ்வாறு சொல்வது சட்டரீதியாக தவறு. ‘ஏ’ பார்ம் ‘பி’ பார்மில்  கையெழுத்தும் போடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது. ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் அவரை மக்கள் சுயேட்சையாக தான் கருதுவர். இந்த தேர்தலில் நோட்டாவுக்கும் கீழே ஓபிஎஸ் சென்று விடுவார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : O. Panneerselvam ,Erode East ,Ex-Minister ,Jayakumar Kindal , O. Panneerselvam will lose to NOTA if he stands in the Erode East by-election: Ex-Minister Jayakumar Kindal
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்