குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ரயில்களில் பார்சல் சேவை நிறுத்தம்: ரயில்வே நிர்வாகம் உத்தரவு

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று  முதல்  ஜன. 26ம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகள் ஜன.23ம் தேதி முதல் ஜன.26ம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், செய்தித்தாள்கள், இதழ்கள் செல்ல தடையில்லை என்று தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.

Related Stories: