பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு நாளை பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

டெல்லி: பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  நாளை பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்க உள்ளார். ஒன்றிய அரசு குழந்தைகளின் சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை, கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை, விளையாட்டு ஆகிய 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும்  5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் இவ்வாண்டு கலை, கலாச்சாரத் துறையில் 4 விருதுகள், துணிச்சல் மற்றும் சமூக சேவைக்கு தலா 1 விருது, புதுமை பிரிவில் 2 விருதுகள், விளையாட்டு துறையில் 3 விருதுகள் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை விருது வழங்க உள்ளார்.

Related Stories: