×

பனிப்புயலின் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகருக்கு 30 எலும்புகள் முறிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பனிப்புயலின் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னருக்கு 30க்கும் மேற்பட்ட எலும்புகள் முறிவு ஏற்பட்டதாக அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரும்,  ‘அவெஞ்சர்ஸ்’ படத்தில் நடித்தவருமான பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் (52), அமெரிக்காவிலுள்ள ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கினார்.

அவரது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் படுகாயமடைந்தார். ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பால் மீண்டு வருகிறேன். விபத்தில் சிக்கியதால் 30க்கும் மேற்பட்ட எலும்புகள் முறிந்துள்ளன. அவை சரியாகிவிடும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Hollywood actor breaks 30 bones in blizzard accident
× RELATED ஹமாஸ் கடத்திய 4 பிணைக்கைதிகள் மீட்பு: இஸ்ரேல் தாக்குதலில் 94 பேர் பலி