திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: