மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகள் மூலம், 840 மெகா வாட்டும், 2வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். கடந்த 16ம் தேதி, 2வது பிரிவில் கொதிகலன் குழாயில் கோளாறு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. முதல் பிரிவின் 1வது அலகிலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று, முதல் பிரிவில் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின்சாரமும், 2வது பிரிவில் கோளாறு சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. 2 பிரிவிலும் சேர்த்து 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: