×

எய்ம்ஸ் லோகோவில் தமிழ் மொழியில் பெயர்: ஒன்றிய அமைச்சருக்கு எம்.பி கடிதம்

திருப்பரங்குன்றம்:  மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை லோகோவில் தமிழ் மொழியில் பெயரை சேர்க்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்பி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ் மொழி கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அமைக்கப்படுவதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மேலும் சமீபத்தில் சென்னையில் நடந்த மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு மற்றும் நிறுவனக்குழு ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாளச் சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, ​​மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : AIIMS , Name in Tamil on AIIMS logo: MP Letter to Union Minister
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் வழக்கு:...