பிப்.16 சட்டமன்ற தேர்தல் திரிபுராவில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

அகர்தலா: 60 தொகுதிகளை கொண்ட வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இம்மாதம் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜனவரி 31ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுபாசிஷ் பந்தோபாத்யாய  தெரிவித்தார்.

28 லட்சத்து 13 ஆயிரத்து 478 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். நியாயமான, சுதந்திரமான வாக்குப்பதிவை உறுதி செய்ய 3,328 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories: