×

சென்னை பேருந்தில் பயணிக்க மாதாந்திர பயண அட்டை வழங்க அவகாசம் நீட்டிப்பு: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: சென்னை பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர பயண அட்டைகளை நாளை வரை வழங்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயண அட்டை விற்பனை மையங்களில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண சலுகை பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுகின்றன.

இருப்பினும், கடந்த 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன் கருதி மாதாந்திர சலுகை, மாணவர் சலுகை பயண அட்டை மற்றும் ரூ.1000 மதிப்பிலான பயண அட்டைகளில் விற்பனை நாளை வரை நீட்டித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பயணிகள் நாளை அனைத்து மாநகர போக்குவரத்து கழக மாதாந்திர பயண அட்டையை விற்பனை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Transport Department , Extension of time for issuance of monthly travel card for traveling in Chennai buses: Information from Transport Department
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்