×

அனுமதியின்றி அமைக்கப்பட்ட 200 பேனர்கள் அகற்றம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 200 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற, மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி 200 பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தொடர்ந்து, இதுபோல அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் அகற்றும் பணி தொடரும் எனவும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் விளம்பரப் பேனர்கள் அமைப்பவர்களின் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Removal of 200 banners erected without permission
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...