×

கறம்பக்குடி அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை-வருவாய்த்துறை அகற்றம்

கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அமைத்திருந்த கொட்டகைகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா திருமணஞ்சேரி ஊராட்சி மஞ்சுவிடுதி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த சிலர் நேற்று காலை தங்களுக்கு இடம் வேண்டும் என்று கூறி கீற்றுகளால் கொட்டகை அமைத்திருந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோயில் இடத்தை ஆக்கிரமித்து அமைத்திருந்த கொட்டகைகளை அகற்றினர். அப்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க கறம்பக்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக அப்பகுதியில் நேற்று காலை பரபரப்புடன் காணப்பட்டது….

The post கறம்பக்குடி அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை-வருவாய்த்துறை அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Puthukottai district ,
× RELATED கறம்பக்குடி அருகே தைல மரக்காடு தீயில் எரிந்து சேதம்