திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு நிர்வாகிகள் நியமனம்: செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ அறிவிப்பு

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்- துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சென்னை வடக்கு மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் ஆ.ரமேஷ்பாபு, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ரா.இம்ரான், க.பெ.மோகன்பாபு, எஸ்.கிறிஸ்துராஜ் பிராங்க்ளின், ஜோ.செந்தில்சுவாமி, பா.ஆனந்தி. சென்னை வடகிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.சீனிவாசன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் வீ.மணிகண்டன், சு. நரேந்திரன், பா.கோபிநாத், வி.சிவரஞ்சினி.

சென்னை தென்மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கதிரவன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.தினகரன், வசந்த் கபாலி, எம்.லட்சுமணன், டி.காமாட்சி. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  எஸ்.எம்.ஜியாவுதீன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.யோகானந்த், வி.இளம்பரிதி, ஏ.மூர்த்தி, எம்.வசந்தராஜ், எஸ்.அரவிந்த்குமார், பி.விஜயலட்சுமி. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ரமேஷ், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் து.ஜானகிராமன், கே.சரண்ராஜ், ஜெ.பிரதாப், சு.பூர்ணிஷா. திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.எம்.கிஷோர்குமார், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் சு.ரேணுகுமார், த.சரத் குமார், டி.ஆர்.தினகரன், பி. நிவேதா. திருவள்ளூர் மத்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரவீன்குமார், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ச.சாருக் சராபத், சு.மோத்திஸ் ஜித்து, க.பாபு, ஆர்.சக்தி பிரியதர்சினி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் ராணிப்பேட்டை மாவட் ஒருங்கிணைப்பாளராக ஜே.டான்போஸ், வேலூர் மாவட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுப்பம் ஜி.முருகானந்தம், திருப்பத்தூர் மாவட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஜய் ராஜசேகர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.கே.ஆர்.ரவி, நாகை மாவட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பாரிபாலன், திருப்பூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.நவீன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.அபிராமிநாதன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரின்பராஜ், தேனி வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.ராஜேஸ்குமார், மதுரை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உ.யுவராஜா, மதுரை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: