குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் பங்கேற்பு

புதுடெல்லி: சுதந்திர இந்தியாவின் 74வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் ெடல்லியில் புதியதாக பதவியேற்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி பங்கேற்கிறார். இந்தாண்டுக்கான ஜி-20 மாநாட்டின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதால், சிறப்பு விருந்தினர் நாடாக எகிப்தை இந்தியா அறிவித்தது. குடியரசு தின விழாவில் அப்துல் பத்தா அல்-சிசியுடன் 180 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு குடியரசு தின விழாவில் 19 நாடுகளைச் சேர்ந்த 32 அதிகாரிகள் மற்றும் 166 கேடட்களும் பங்கேற்கிறார்கள். மேலும் 32,000 டிக்கெட்டுகள் பொது மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: