×

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட முன்வந்தால் தார்மீக ஆதரவு அளிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட முன்வந்தால் தார்மீக ஆதரவு அளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கமலாலயத்தில் அண்ணாமலையை சந்தித்த பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அண்ணாமலையை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ் அளித்த பேட்டியில்;   

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. பாஜக மாநில தலைவரையும், பாஜக முன்னணி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு எந்த காலத்திலும் பன்னீர்செல்வம் தடையாக இருக்க மாட்டான், வரும் 23ம் தேதி நடைபெறும் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் கருத்தை கேட்டு செயல்படவுள்ளோம். அதிமுகவில் குழப்பத்தை நாங்கள் உருவாக்கவில்லை, பிரிந்து இருக்கும் அதிமுக ஒன்று சேர வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. அனைவரும் இணைந்து எந்த நோக்கத்திற்காக அதிமுக உருவாக்கப்பட்டதோ அதற்கு உறுதுணையாக இருக்கிறோம் அதை நோக்கி தான் பயணிக்கிரோம் என ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Bajaka ,O.J. Panneerselvam , Moral support given to BJP if it contests Erode East constituency: O. Panneerselvam interview
× RELATED முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த...