பாஜக 156 இடத்தில் வென்றதால் 156 கிராமில் தங்க மோடி சிலை: குஜராத் நிறுவனம் தயாரிப்பு

சூரத்: சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அம்மாநில மக்கள் பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், சூரத்தில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனம், 18 காரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை உருவாக்கி உள்ளது. கடந்த மாதமே சிலை தயாரான நிலையில், அதன் எடை 156 கிராமுக்கு மேல் இருந்தது. பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அதற்காக சில மாறுதல்கள் செய்யப்பட்டு சிலையின் எடையை 156 கிராமாக குறைத்தனர்.

இந்த சிலையை 20 பொற்கொல்லர்கள் சேர்ந்து 3 மாதங்களாக உருவாக்கி உள்ளனர். ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் இந்த சிலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலையை உருவாக்கிய நகை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வசந்த் போரா கூறுகையில், ‘மோடியின் சிலை மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அந்த சிலையை விலைக்கு வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் சிலையை விற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார்.

Related Stories: