×

ஆஸி. டெஸ்ட் தொடருக்கு முன் அபாரம்: `ஒன்மேன் ஆர்மி ஆட்டம்’ ஆடி அசத்திய புஜாரா

சென்னை: இந்தியா, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்னும் 4 வாரங்களில் துவங்கி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 9-13, 17-21 மற்றும் மார்ச் 1-5, 9-13 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான ஆஸ்திரேலிய அணியில் 18 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், 4 தரமான ஸ்பின்னர்களும் இடம்பெற்றுள்ளதால், இத்தொடரில் வெற்றிபெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டிய நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 2 போட்டிக்கான அணியை மட்டும்தான் தற்போது பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 3 போட்டிகளில் வென்றால் மட்டும்தான் இந்திய அணியால், ஜுன் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

விராட் கோலி ஒருநாள், டி20 தொடர்களில் பார்மில் இருந்தாலும் டெஸ்டில் இன்னமும் தடுமாற்றத்துடன்தான் விளையாடி வருகிறார். ரோகித் சர்மாவும் சமீப காலமாக டெஸ்டில் சிறப்பாக செயல்படுவது கிடையாது. அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பன்ட்ம் சாலை விபத்தில் சிக்கி, 6 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்திய அணியின் முழு நம்பிக்கையும் தற்போது புஜாரா மீதுதான் இருக்கிறது. காரணம், புஜாரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறந்த ரெக்கார்டை வைத்திருக்கிறார். ஆஸிக்கு எதிராக மொத்தம் 20 டெஸ்டில் 5 சதம், 10 அரை சதங்கள் உட்பட 1893 ரன்களை அடித்திருக்கிறார். சராசரி 54 ரன்களாக இருக்கிறது.

இதனால், புஜாரா மீதுதான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இவர் தற்போது ரஞ்சிக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதில் ஆந்திர  அணிக்கு எதிராக சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிய புஜாரா, கடினமான 2வது இன்னிங்சில் 91 ரன்களை குவித்து அசத்தினார். இருப்பினும், சௌராஷ்டிரா அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

புஜாரா இப்படி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களை அடித்ததன் மூலம், இந்திய மண்ணில் 12000 ரன்களை அடித்த வீரர் என்ற மெகா சாதனையை படைத்து அசத்தினார். மேலும், புஜாரா தனது பார்மை நிரூபித்திருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட்களிலும் மிரட்டலாக விளையாடி ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Tags : Aussie ,Aparam ,Asatya Pujara , Aussie Abaram ahead of Test series: Asatya Pujara plays 'one-man army game'
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...