ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அண்ணாமலையுடன் பழனிசாமி தரப்பு சந்திப்பு நிறைவு

சென்னை: அண்ணாமலையுடன் பழனிசாமி தரப்பு சந்திப்பு நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க கோரி அண்ணாமலையுடன் பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையை தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் சந்தித்தனர். பாஜக சார்பில் எச்.ராஜா, கரு.நாகராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று மாலை 4 மணிக்கு அண்ணாமலையை பன்னீர் தரப்பு சந்திக்க உள்ள நிலையில் பழனிசாமி தரப்பு முன்கூட்டியே சந்தித்து பேசியது.

Related Stories: