3 மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய ஜன. 25ம் தேதி காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம்..!!

டெல்லி: 3 மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய ஜனவரி 25ம் தேதி காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய, மாநில கட்சிகள் வேட்பாளர் தேர்வை தொடங்கியுள்ளது. கூட்டத்தில் 3 மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: