புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி: சாலை, குடிநீர் வசதிகளை உடனே செய்துதர மக்கள் கோரிக்கை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரந்தாங்கியை அடுத்த கரூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதராததால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் கரூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமுளூர், வடக்கூர், கொங்கரான் வயல், கோனேரி ஏந்தல் கிராமங்களில் சரியான சாலைவசதியோ போதிய குடிநீர் வசதியோ இல்லை என்பது குற்றச்சாட்டாகும்.

 கோரிக்கை நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். தார்ச்சாலை, குடிநீர் வசதிகள் விரைவாக செய்துதரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.  வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று நான்கு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories: