தா.பழூர் அருகே உள்ள வண்ணான் ஏரியில் இறந்து கிடக்கும் பன்றிகளால் நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணான் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை தூர் வாராததால் மண் தூர்ந்து முள் புதர்கள் மண்டி கிடக்கின்றது. இந்நிலையில் ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசும் நிலையில் அங்கு சென்று பார்த்த போது பன்றிகள் இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளது. தற்போது இறந்த நிலையிலும் பன்றிகள் முட்டுமுட்டாக இறந்து கிடக்கின்றது. இதில் அழுகிய நிலையில் உள்ள பன்றிகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. பன்றிகள் அதிக அளவில் இறந்து கிடப்பதால் நோய் ஏற்பட்டு பன்றிகள் இறந்து இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பன்றிகளால் துர்நாற்றம் வீசுவதாலும், நாய் மற்றும் பறவைகள் இதை உண்பதாலும் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் ஏரி பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஏரியில் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனர். மேலும் பன்றிகளுக்கு கோழி கழிவுகளை கொட்டி உணவு அளித்தும் வருகின்றனர். இதனால் ஏரியை கடக்கும் போது மூக்கை மூடி செல்லும் நிலையும் உள்ளது. ஏரியில் உள்ள நீரில் பொதுமக்கள் குளிப்பதற்கும் , கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இறந்து பன்றியை தண்ணீரில் வீசி உள்ளதால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

மேலும் கால்நடைகளுக்கும் இந்த ஏரி நீரை பயன்படுத்துவதால் கால்நடைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இறக்கும் பன்றிகளை புதைக்காமல் தூக்கி எரியும் சம்பவம் சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த தொடர் சம்பவத்தை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.  ஆகையால் இறந்த பன்றிகளை அப்புற படுத்தி தொடர்ந்து இது போன்ற நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: