×

குன்னூரில் 40 நாட்களாக முகாமிட்டிருந்த யானை கூட்டம் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது: பொதுமக்கள் நிம்மதி

குன்னூர்: குன்னூரில் 40 நாட்களாக முகாமிட்டிருந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் மற்றும் பழங்குடியினர் இணைந்து ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். சமவெளி பகுதிகளிலிருந்து குட்டியுடன் 9 காட்டுயானைகள் குன்னூரில் கடந்த 40 நாட்களாக முகாமிட்டது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பிலும் முகாமிட்டிருந்தன.

இந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். போதிய ஆட்கள் இல்லாததால் யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.  பழங்குடியின மக்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினருடன் 20க்கும் மேற்பட்ட பழங்குடியினர் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று காட்டு யானை கூட்டத்தை பக்காசூரன்மலை பகுதியில் இருந்து ரன்னிமேடு ரயில் நிலையம் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இதனால், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். யானை கூட்டம் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வராமல் இருக்க கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Coonoor , Herd of elephants camped in Coonoor for 40 days driven into forest: Public relieved
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...