கீழக்கரை நகர் பகுதியில் குப்பைகள் சேருமிடமாக மாறியுள்ள பொதுக்கிணறு: சீரமைக்க மக்கள் கோரிக்கை

கீழக்கரை: கீழக்கரையில் குப்பைகள் சேருமிடமாக மாறியுள்ள பொதுக்கிணற்றினை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் 7வது வார்டுக்குட்பட்ட வடக்கு தெரு மணல்மேடு அருகில் ஒரு பொதுக்கிணறு அமைந்துள்ளது. பயன்பாடின்றி கிடக்கும் இந்த கிணற்றில் தற்போது அதிக அளவில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதோடு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் உருவாகும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் வீடு, வீடாக சென்று குப்பைகள் ேசகரிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வராததால் பொதுமக்கள் வீதிக்கு சென்று குப்பையை கொட்டும் நிலை இருந்து வருகிறது.

அப்பகுதி தர்காவிற்கான வழியாக உள்ளதால், இதன் வழியாக செல்லும் மக்கள் வேதனையடையும் அளவிற்கு குப்பைகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு கிணற்றை சுற்றி கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி கிணற்றை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது போன்று கீழக்கரையில் உள்ள வடக்கு தெரு மாரியம்மன் கோயில், முஸ்லிம் பஜார், ஜின்னா தெரு ஆகிய பகுதிகளில் பாழடைந்த நிலையில் உள்ள பொது கிணறுகளையும் தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: