×

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தின் 3-ம் வழித் தடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல்..!

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தின் 3-ம் வழித் தடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த திட்டப்பணிகளில் மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தின் 3-ம் வழித் தடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 3வது வழித்தடமானது மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 45.8கி.மீ வழித்தடத்தில் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு எல்லையில் மெட்ரோ திட்டம் அமைகிறது.

பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆற்றில் CRZ எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மெட்ரோ திட்டம் அமைகிறது. அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைத்து பணிகள் மேற்கொள்ள தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளை பொறுத்தவரை திருமுளல்லவாயில் பகுதியில் 58.33 மீட்டர் தொலைவிற்கு, அதேபோல் அடையாறு பகுதியில் 666.3 மீட்டருக்கும், தரமணி பகுதியில் 495.5 மீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற இருக்கிறது.

அதேபோல் தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய மெட்ரோ ரயில் பணிகளிலையே அதிக ஆழத்தில் இருக்கக்கூடிய மெட்ரோ ரயில் நிலையமாக திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம் என்பது அமைய இருக்கிறது. 523.6 சதுர மீட்டர் பரப்பளவில் திருமயிலை மெட்ரோ ரயில் நிலையமானது அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் பக்கிங்ஹாம் கால்வாயில் மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Environmental Expert Appraisal Committee ,Chennai Metro Rail , Environmental Expert Appraisal Committee approves Coastal Regulatory Zone permission for Chennai Metro Rail Phase 2 Line 3..!
× RELATED மெட்ரோ ரயில் நிலைய வாகன...