ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவை தோற்கடிப்பதே பன்னீரின் நோக்கம்: முன்னாள் அமைச்சர் தங்கமணி சாடல்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவை தோற்கடிப்பதே ஓ.பன்னிர்செல்வத்தின் நோக்கம் என்று பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஓ.பன்னிர்செல்வத்தை மறைமுகமாக விமர்சித்து பேசினார். அதிமுக நிர்வாகிகள் சட்ட மன்ற உறுப்பினர்களில் 98.5 விழுக்காட்டினர் எடப்பாடி பழனிசாமியுடன் தான் இருப்பதாகவும் வெட்டுக்கிளிகள், பட்டு பூச்சிகளை போல சிலர் மட்டுமே பெருந்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும் போது அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ஓ.பன்னிர்செல்வம் போட்டி வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாகவும் விமர்சித்தார். ஆனால் சாதாரண தொண்டர்களின் ஆதரவு பன்னிர்செல்வத்திற்கே உள்ளது என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலிலும் பழனிசாமி அணிக்கு தோல்வியே மிஞ்சும் என்று அவர் கூறியுள்ளார். 

Related Stories: