புவெனஸ் ஐரிஸ்: அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் கார்போடா பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது. இதனால், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின. இதனால் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக தெருக்களில் குவிந்தனர்.