ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எதிரொலி: பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை:  ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையொட்டி, பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியாக போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதுபற்றி ஆலோசனை நடத்த வருகிற 23ம் தேதி மாலை சென்னை, எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் கூட்டியுள்ளார். இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் (23ம் தேதி) சென்னையில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு இறுதி முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொள்ள ஓபிஎஸ் நேரில் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories: