நெல்லையில் விரைவில் கலைஞர் நூலகம்: சபாநாயகர் அப்பாவு பேச்சு

நெல்லை: நெல்லையில் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். நூலகங்களின் நிலையான வளர்ச்சிக்கு புதிய யுக்திகள் குறித்த 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. கருத்தரங்ககை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: நூலகத் துறையின் இப்போதைய மாற்றங்கள் குறித்தும், வருங்காலத்தில் அதில் புகுத்த வேண்டிய புதிய யுக்திகள் குறித்தும் நாடு முழுவதிலும் இருந்து, பல நூலகர்கள் இந்த கருத்தரங்கிற்கு வந்து கருத்து கூறுவது பெருமையளிக்கிறது.

தமிழ்நாட்டில் 200 ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதிக்கு வித்திட்டது  இயேசு சபைதான். தமிழ்நாட்டு முதல்வர் சட்டசபையில் தெரிவித்தது போல நாங்கள் எப்போதும் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் மதவாதத்திற்கு எதிரானவர்கள். கலைஞர் சென்னையில் உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகம், அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. மதுரையில் கலைஞர் நூலகம் விரைவில் அமைய உள்ளது. நெல்லை மாவட்டத்திலும் பொருநை அருங்காட்சியம் அருகே அப்படியொரு நூலகம் அமைக்க தொடர்ந்து முதல்வரிடம் கோரிக்கை வைத்து வருகிறேன். விரைவில் அது நிறைவேறும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.

Related Stories: