பணியாளர் தேர்வாணைய தேர்வை இனி தமிழில் எழுதலாம்: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் டி பிரிவு பதவிகளுக்கு  அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளின் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல்முறையாக எஸ்எஸ்சி நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுத ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘‘வேலை தேடுவோர் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கவேண்டும். மொழி காரணமாக ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்று பிரதமர்  மோடி தெரிவித்த கருத்தின் அடிப்படையிலானது இந்த நடவடிக்கை. தென்னிந்தியாவைச் சேர்ந்த  மாணவர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்குப் பின் படிப்படியாக அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும்’’

என்றார்.

* எந்ததெந்த மொழிகள் தமிழ்,உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கொங்கணி, மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி.

Related Stories: