×

மாநில டிஜிபிக்கள், ஐஜிக்கள் கூட்டம்: டெல்லியில் தொடங்கியது

புதுடெல்லி: அனைத்து மாநிலங்களின் டிஜிபிக்கள், ஐஜி க்கள் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ளும் 3 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களை சேர்ந்த காவல்துறை தலைவர்களின் ஆண்டு கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்தது. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின்னர் இந்த கூட்டம் தலைநருக்கு வெளியே நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறை கூட்டம் டெல்லியின் புசாவில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வருகின்றது. 3 நாள் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த டிஜிபிக்கள், ஐஜிக்கள் மற்றும் துணை ராணுவ அமைப்பை சேர்ந்த 350 அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் சைபர் பாதுகாப்பு, போதைப்பொருட்களுக்கு எதிரான போர், எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றது. மேலும் காலிஸ்தான் தீவிரவாதிகள், பொருளாதாரத்திற்கான ஆபத்து, கிரிப்டோகரன்சி, மாவோயிஸ்ட் தீவிரவாதம் மற்றும் இதர பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Tags : DGPs ,IGs ,Delhi , State DGPs, IGs meeting: Begins in Delhi
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் அசம்பாவிதங்களை...