×

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் நாளை ரத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (எண் 42831), கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே நாளை இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (எண் 42836) ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி இடையே நாளை இரவு 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (எண் 42037), பொன்னேரி - கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் இடையேயும் 23ம் தேதி 3.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (எண் 42002) கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Southern Railway , Electric trains canceled due to maintenance work: Southern Railway Notification
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...