அமெரிக்காவின் டல்லஸ் நகரில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் 300வது புதிய ஷோரூம் திறப்பு

சென்னை: உலகம் முழுவதும் 10 நாடுகளில் 300 ஷோரூம்கள் என்கிற தனது வலுவான நெட்வொர்க்கால் உலகின் 6வது மாபெரும் சில்லறை ஆபரண வர்த்தக நிறுவனமாக விளங்கும் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 300வது உலகளாவிய ஷோரூம் திறப்பு விழா, அமெரிக்காவின் டல்லஸ் நகரில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. காலின் நகரின் கவுண்டி கமிஷனரான சூஸன் ப்ளெட்சர் மற்றும் டெக்சாஸ் நகரின் மேயர் ஜெப் செனே ஆகிய இருவரும் மலபார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் (சர்வதேச செயல்பாடுகள்) ஷாம்லால் அகமது முன்னிலையில் ஷோருமை திறந்து வைத்தனர். மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது, துணைத்தலைவர் கே.பி.அப்துல் சலாம், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் ஓ.அஷர் மற்றும் குழும நிர்வாக இயக்குனர் மற்றும் பி2பி ஏ.கே.நிஷாத் உள்ளிட்ட பலர், குழும உறுப்பினர்கள், நலம் விரும்பிகள், பிற விருந்தாளிகள் காணொலி காட்சி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இதுகுறித்து மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது கூறுகையில், ‘‘எமது பல்வேறான பொருட்கள், சேவைகள் மற்றும் உத்தரவாதங்களுடன் புதுப்புது சந்தைகளில் நுழையும் திட்டமும் வைத்துள்ளோம். எமது பிராண்டை மக்கள் ஏற்று அதற்கு தரும் பேராதரவுதான் உலகின் ‘நம்பர் 1’ ஆபரண சில்லறை வர்த்தக நிறுவனமாக வேண்டும் என்கிற இலக்கை நோக்கிப் பணிபுரியவும் விரிவாக்கம் செய்யவும் தேவையான பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. உலகளாவிய சில்லறை ஷோரூம்கள் விரிவாக்க திட்டத்திற்கு உதவும் விதமாக தனது உற்பத்தித் திறன்களை இன்னும் வலுவாக்கும் எண்ணமும் குழுமத்திற்கு உள்ளது,” என்றார்.

Related Stories: