×

வீடியோகான் நிறுவனர் ஜாமீனில் விடுதலை

மும்பை: கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்டார். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் ஜாமீன் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே, பி.கே.சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து வேணுகோபால் தூத் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Tags : Videocon , Videocon founder released on bail
× RELATED வங்கிக் கடன் மோசடி விவகாரம்;...