அமொிக்காவில் இந்து கோயிலில் கொள்ளை

ஹூஸ்டன்: அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த ஜனவரி 11 அன்று பிரசோஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீஓம்கர்நாத் கோயிலில் உயர் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதை ஸ்ரீ ஓம்கர்நாத் கோவிலின் வாரிய உறுப்பினர் ஸ்ரீனிவாச சுங்கரி உறுதிப்படுத்தினார். பிரசோஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஒரே இந்துக் கோயில் இதுவாகும். கோயில் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், காணிக்கை மற்றும் நகைப்பெட்டியை எடுத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related Stories: