ஆஸி. ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் ஸ்வியாடெக்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றுள்ளார். 3வது சுற்றில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவுடன் (25 வயது, 100வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து) அதிரடியாக விளையாடி 6-0, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 55 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் கோகோ காஃப், ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), கிரெஜ்சிகோவா (செக்.), எலனா ரைபாகினா (ரஷ்யா), யெலனா ஓஸ்டபென்கோ (லாத்வியா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதிய ரஷ்ய நட்சத்திரம் மெட்வதேவ் 6-7 (7-9), 3-6, 6-7 (4-7) என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். சிட்சிபாஸ் (கிரீஸ்), சின்னர் (இத்தாலி), ஹர்காக்ஸ் (போலந்து), அலியஸ்ஸிமி (கனடா), கரன் கச்செனோவ் (ரஷ்யா) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றில் நுழைந்துள்ளனர்.

Related Stories: