×

மதுரையில் 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்: மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்

மதுரை: மதுரையில் அனுமதியின்றி நள்ளிரவில் வாரிசு, துணிவு படங்களை வெளியிட்டதாக 34 திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் நோடீஸ் அளித்துளளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும்  விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் கடந்த 10ம் தேதி நள்ளிரவில் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி இருந்தது.

தமிழ் திரையுலகத்தின் இருவரும் நட்சத்திர நடிகர்களான விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சி நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு ஒரே நாளில் வெளியாகி இருந்தது. மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 17க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் 13க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் வாரிசு, துணிவு திரைப்படங்களை நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஒரு நோட்டீஸ் ஒன்றை அவர்களுக்கு அளித்திருக்கிறார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜயினுடைய வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் 11ம் தேதி 12ம் தேதி 13ம் தேதி மாற்றும் 18ம் தேதி ஆகிய 4 நாட்களில் காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கி அரசனையில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தான் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கடந்த 11ம் தேதி அன்று நள்ளிரவு 1மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் திரையிடப்பட்டதாக கூறி மதுரை மாவட்டத்தில் உள்ள 34  திரையரங்குகளுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் சார்பில் நோட்டீஸ் விதிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்கு முறை சட்டம் 1957யின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து 15 நாட்களுக்குள் திரையரங்குகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்கு முறை சட்டத்தின் படி உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கொடுத்துள்ள நோட்டீஸில் எச்சிரிக்கை கொடுத்திருக்கிறார்.        


Tags : Madurai ,District Collector ,Anish Shekhar , Notice to 34 theaters in Madurai: District Collector Anish Shekhar
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...