×

தரமற்ற உணவு விற்பனை காரணமாக வேல்ஸ் உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை காரணமாக விக்கிரவாண்டி அருகே சாலைகளின் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற தரமற்ற உணவு, கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை பயணிகளிடம் இருந்து வந்த புகார் எழுந்தது. இதனையடுத்து உணவகத்தில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், தரமற்ற உணவு, கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது சோதனையில் கண்டறியப்பட்டது.

இது சம்பந்தப்பட்ட உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப்பேருந்துக் கழக பேருந்துகள் நின்று செல்ல போடப்பட்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இனி எதிர்வரும் காலங்களில் சாலையோர பிற உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு குறைகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே மாமண்டூர் அருகே உள்ள உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி உணவகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Wales ,Minister ,Sivashankar , buggy, food, wales, restaurant, bus, licence, minister, sivashankar
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்